அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை :…

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார்
10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக
நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வெற்றி பெற்று வருகின்றனர். காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் நழுவி விளையாடி வருகின்றனர்.


தற்போது இப் போட்டியின் இரண்டாவது சுற்று முடிவடைந்த சூழலில் மாடு
உரிமையாளர்களான பனையூரைச் சேர்ந்த ஆறுமுகம், தத்தனேரியைச் சேர்ந்த விஷ்னு,
பெரியார் நகரைச் சேர்ந்த மலைச்சாமி, வினிக்குமார், சொரிக்காம்பட்டியைச்
சேர்ந்த செல்லமுத்து, சோழவந்தானைச் சேர்ந்த பாலு, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த
பழனிக்குமார், திருப்புவனத்தைச் சேர்ந்த கருப்புராஜா, சிந்தாமணியைச் சேர்ந்த
ராம்பிரபு என 9 பேரும், வளையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர்
என 10 காயமடைந்தனர்.


இதில் ஆறுமுகம், விஷ்னு, ராம்பிரபு, முருகன் என்ற நான்கு பேருக்கு அவனியாபுரம்
அரசு பள்ளியில் உள்ள முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்
சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.