சல்மான்கான், பிரபுதேவா கூட்டணியில் உருவான ராதே திரைப்படம் லாக்டவுன் காரணமாக OTT தளங்களிலும் , திரிபுராவில் சில திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் சில திரையரங்குகளிலும் மட்டும் வெளியிடப்பட்டது. ஸீ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் 42 லட்சம் ரசிகர்கள் ராதே படத்தை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி ,ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிப்பில் உருவானது ராதே திரைப்படம். பாலிவுட்டில் சல்மான்கான் பிரபுதேவாவின் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் ராதே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வழக்கமாக ரம்ஜான் என்றாலே சல்மானின் படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். இம்முறை லாக்டவுன் என்பதால் படத்தை தியேட்டர்களில் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டது. இது படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது. இந்நிலையில் ஸீ நிறுவனம் ஓடிடி தளத்தில் மே-13-ம் தேதி மதியம் 12 மணிக்கு ராதே படத்தை வெளியிட்டது.

இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் ஓடிடி தளங்களில் ராதே வெளியிடப்பட்டது.ஆஸ்திரேலியாவில் இந்தப் படம் 66 திரையிடல்களில் 35.77 லட்சங்களையும், நியூசிலாந்தில் 19 திரையிடல்களில் 5.89 லட்சங்களையும் முதல் நாளிலேயே சூப்பர் வசூல் செய்துள்ளது என்றும் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியாவில் 69 திரையிடல்களில் 54.93 லட்சத்தையும், நியூஸிலாந்தில் 26 திரையிடல்களில் 9.97 லட்சங்களையும் குவித்துள்ளது ராதே.







