காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, மாதவனின் ‘மின்னலே’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 14 அன்று குணால் – சோனாலி நடிப்பில் வெளியான ‘காதலர் தினம்’ படமும் ரீ-ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடிகர்கள் குணால், சோனாலி, கவுண்டமணி, நாசர், மணிவண்ணன், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் காதலர் தினம். வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.







