முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

கொரோனா தீவிரம்.. பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங் பாதிப்பு

கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதை அடுத்து முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால், முன்னணி ஹீரோ நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சினிமாத் துறை பேரிழப்பை சந்தித்தது. இப்போது பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் சண்டைக் காட்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவை என்பதால், அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜித்தின் வலிமை பட வெளிநாட்டு படப்பிடிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் டான், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Saravana

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை

Karthick

“தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

Gayathri Venkatesan