முக்கியச் செய்திகள் தமிழகம்

சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதனையடுத்து மீனவர்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் தளம் அமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க மாவட்டம் தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும், மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதை பொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை

G SaravanaKumar

கொடைக்கானலில் தொடர் கனமழை!

EZHILARASAN D

விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்

EZHILARASAN D