கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீல் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேய உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, நுாறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா? மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கிராமப்புற பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது குறித்தும் ஆய்வு செய்யபட்டதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிராமப்புற சாலைகள் அதிக துாரம் பழுதடைந்து இருப்பதாகவும், அந்த சாலைகள் அனைத்தும் 5 மாதங்களில் சீரமைக்கப்படும். கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களை கட்ட 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிருப்பதாகவும், அந்த பணிகளும் நடந்து வருகிறது என கூறினார்.
ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களுக்கு மட்டும் கடந்த 2 மாதங்களில் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதால் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.