ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்டிராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…

தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்டிராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கோலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் திருவங்கடம் காவல் அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்று உள்ளார்.
இதனால் சென்னை மாதவரம் போலீசார் தப்பி ஓட முயன்ற குற்றவாளி திருவங்கடத்தை என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.