உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா என்றாலே யாருக்குதுனா பிடிக்காது என்பது போல அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய முழுக்க பலரும் அசைவ உணவு பிரியர்களாக இருக்கின்றனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் சுஷ்மாவுக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்ததது. திருமண விழாவின்போது மணமகள் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மீன் மற்றும் இறைச்சி இல்லாததால் இரு வீட்டார்களும் தாக்கி கொண்டனர். பின்னர் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







