டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலகலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறார்.
டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி, கேப்டன் பொறுப்பிற்கான அழுத்தம் காரணமாக தனது விளையாட்டில் கவனம் செலுத்த இயலாத சூழலில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதனை அடுத்து இந்திய அணியை சர்வதேச அரங்கில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் வழிநடத்தி வருகின்றனர்.
இதில் ரோஹித் சர்மாவுக்கான மிகவும் சவாலான பங்காக காத்திருப்பது, இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டி 20 உலக கோப்பை போட்டிதான்.
இந்நிலையில், சமீப காலமாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் அதிக கவனம் செலுத்துவதால், தனது விளையாட்டுத் திறனை தக்கவைக்கவோ அல்லது மேம்படுத்தவோ இயலாத சூழலில் விளையாடி வருகிறார்.
எனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஷேவாக், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அதாவது, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மாவுக்கு பதில் மற்றொருவர் அணியை தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, ரோஹித் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைமை பொறுப்பினால் அணிக்கு பின்னடைவு ஏற்படும் எனவும், இதனால் அவரால் தனது திறனை சரியான இடத்தில் வெளிபடுத்த முடியவில்லை எனவும், அதற்கு மாறாக மற்றொரு நபருக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் வலியுறுத்தினார்.
அதேநேரம், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஷேவாக் தெரிவித்தார்.