முக்கியச் செய்திகள் விளையாட்டு

40 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை, ரிஷப் பண்ட் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் சின்னசாமி விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 2 நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், நேற்று இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

1982ல் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே கராச்சியில் நடந்த டெஸ்ட்டில், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் கபில் தேவ். இதுவே, கடந்த 40 வருடங்களாக எந்த ஒரு இந்திய வீரராளும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது.

இந்நிலையில், ரிஷப் பண்ட் நேற்றைய ஆட்டத்தின்போது, 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், குறைந்த பந்துகளில் அரைசதத்தை எட்டிய இந்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு, சர்வதேச பட்டியலில், 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் பட்டியலில், பண்டிற்கு அடுத்ததாக கபில் தேவும் மூன்றாவது இடத்தில் சர்துல் தாகூரும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி, குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலிலும், சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை ‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!!

Web Editor

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விரைவில் டிக்கெட் விற்பனை

Web Editor

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்!

Gayathri Venkatesan