ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூலை 1ஆம் தேதி டெஸ்ட் போட்டி பிர்மிங்கமில் தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்ந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் குணமடைந்து விளையாடி வருகின்றனர். தற்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரோஹித் சர்மா பிர்மிங்கத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. காயம் காரணமாக கே.எல்.ராகுலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரோஹித்துக்கு மாற்றாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இன்று இங்கிலாந்துக்கு வரும் மயங்க் அகர்வால் புதிய விதிகளின்படி தனிமைப்படுதிக் கொள்ளத் தேவையில்லை. எனவே, அணியில் நேரடியாக இணையவுள்ளார்.
-ம.பவித்ரா