ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ்!

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பயணத்தையும் போல…

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பயணத்தையும் போல இந்தப் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்துவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காக பெருமைப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகளாக கேப்டனாக இருந்தது என்னையும், எனது அணியையும் வடிவமைக்க உதவியது. போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், மகளிர் கிரிக்கெட்டுக்கு வேறுவகையில் எனது பங்களிப்பை செலுத்துவேன். என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய 2வது இன்னிங்ஷை உங்களுடைய ஆதரவுடன் ஆரம்பிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மித்தாலி ராஜ் இந்திய மகளிர் அணிக்காக 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 7,805 ரன்கள் குவித்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 699 ரன்களும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களும் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து மித்தாலி ராஜ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மணன், சுரேஷ் ரெய்னா, வாஷிம் ஜாஃபர், ஆண்களுக்கான முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்பிளே உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Video Link : https://www.youtube.com/watch?v=SzqYIFEMBWE

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.