விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாரும், நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து இன்று மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை ஈவிகேஎஸ் இளங்கோவன் பெறுவார்.
தமிழ்நாட்டில் காமராஜர் பெயரை சொல்லாமல் எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. அகில இந்திய காங்கிரஸ் மாநாடு விளம்பரத்தில் காமராஜர் படம் இடம்பெறாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இதையும் படியுங்கள் : காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளை விரைவுபடுத்தவும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
களக்காடு பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், கேரள மாநிலத்தைப்போல் காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
– கு. பாலமுருகன்







