வேலூரில் பிரபல நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
வேலூரில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பிரபல தனியார் நகைக் கடையின் சுவரை துளையிட்டு 16 கிலோ தங்க நகைகளை முகமூடி அணிந்த நபர் கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
சிசிடிவி காட்சிகளின் மூலம், நகைகளை கொள்ளையடித்தது வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்கா ராமன் என்பது தெரிய வந்தது. சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பதாகவுvellம் டீக்கா ராமன் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் சுடுகாட்டுப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகளை மீட்டனர்.








