கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் கூலி வேலைக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி பகுதியில் சென்றபோது எதிரே வந்த சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி மற்றும் 3 மாத பெண் குழந்தை வர்ஷினி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு காவேரிபட்டினம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணகிரி
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.