“அனைவருக்கும் எனது இதயங்கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.