பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக  தமிழ்நாடு அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக  தமிழ்நாடு அரசிற்கான 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

இந்த நிழல் நிதி நிலை அறிக்கையில்  வேளாண் திட்டங்களுக்கு நிதித் திரட்ட சிறப்பு வரி, 72  லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு ரூ.3,600 கோடி ஊக்கத்தொகை, 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள், உழவர் மூலதன மானியம், என்.எல்.சி. சுரங்கம் தொடர்பாக  வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது..

இந்தியாவிலேயே மூன்று மாநிலங்களில் தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திராவும் மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளன. தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மக்கள் வேளாண் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் பொதுவாக மூன்று துறைகள் இருக்கின்றன. சேவை துறை, உற்பத்தி துறை மற்றும்  வேளாண் துறை ஆகிய மூன்று துறைகள் ஆகும்.

பொருளாதார பங்களிப்பில் சேவை துறை 54 விழுக்காடு, உற்பத்தி துறை 37 விழுக்காடுமாகும். ஆனால் வேளாண் துறை பங்களிப்பு வெறும் 11 விழுக்காடு மட்டுமே அதில் உள்ள  மக்கள் தொகையில் 58% ஆகும். இந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை 73 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. இதில் 53 ஆயிரம் கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும், நீர்வளத்துறை சார்பில் 20 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

வேளாண்துறை நிதி ஒதுக்கீட்டில் 53 ஆயிரம் கோடி ரூபாயில் 12, 500 கோடி ரூபாய் உழவர் மூலதன மானியத்திற்கு செலவிட வேண்டும். வேளாண் கல்வி 18,500 வேளாண் கட்டமைப்பு வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைகளுக்கு மேம்படுத்தும் திட்டங்களுக்கு செலவிட வேண்டும்.

22,000 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டும். பாசனப்பரப்பை மீட்டெடுப்பதற்கான ஆண்டாக இந்த ஆண்டு இருக்க வேண்டும். பாசனப் பரப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டது. கடந்த 60 ஆண்டுகளில் பாசன கால் வகைகள் 9.03 ஹேக்டர் அளவாக இருந்தது தற்பொழுது 6.15 ஹேக்டர் அளவாக குறைந்துள்ளது.

கடந்த காலங்களில்  5.7 லட்சம் ஹெக்டெர் இழந்த பாசன பரப்பை , அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 3 லட்சம் ஹேக்டெர்  மீட்டெடுக்கப்படும் .இதற்காக ஏரிகள் வேளாண்மை வாரியம் என்று புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எண்ணிக்கை 3504ல் இருந்து 4000 ஆக உயர்த்தப்படும் நெல் சேமிப்பு கிடங்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்த்தப்படும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5000 முட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்

நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குண்டாலுக்கு 500 வீதம் ஊக்குத்தொகை வழங்கப்படும் இதற்காக 3600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.  இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2700 விலை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் வீதம் அதிகபட்சமாக 30 ஆயிரம் மூலதன மானியம் வழங்க வேண்டும். அதுபோக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் 6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக 36,000 ரூபாய் வழங்க வேண்டும் ஒரு ஏக்கருக்கு 16,000 ரூபாய் இரு ஏக்கருக்கு 26,000 ரூபாய்,  3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்பவருக்கு 36,000 ரூபாய் என்ற அளவில் மானியம் கிடைக்கும்.

கொள்முதல் நிலையங்களில் வெளி மாநிலத்தவர்கள் நெல் விற்பனை செய்வதையும் முறைகேடுகளை தடுக்கவும் உழவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது.  இது தொடர்பான என்எல்சி கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது.

தமிழ்நாட்டை வேளாண்மையில்  சிறந்த மாநிலமாக மாற்றும் நோக்குடன் தமிழ்நாடு மாநில வேளாண் கொள்கை உருவாக்கப்படும் அதற்காக நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும். வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கபட்ட விவசாயிகள் 46 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆனால் அரசு 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்திருக்கிறது. நாங்கள் இது போன்ற நேரங்களில் 50 ஆயிரம் கொடுப்போம்.

தோட்டக்கலை பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்.. தமிழ்நாட்டில் காய்கறிகள் பழங்கள் பயிரிடும் பரப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 50 விழுக்காடு அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தபடும். நொய்யல் ஆறு மீட்டெடுக்க திட்டம், தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் பாசன திட்டம் ஜூலை மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும்.

நிழல் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு வேளாண் அமைச்சர், முதலமைச்சர், அதிகாரிகளிடம் வழங்கப்படும். எங்கள் நிழல் நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்காக தான் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரித்து உள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளுக்கு 5 ஆயிரம் கோடி மறு முதலீடு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது மாறாக பத்து சதவீதம் மானியம் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் புதிதாக தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் தமிழகத்தில் உள்ள நாட்டு தோட்டக்கலை கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையில் புதிய பட்டு புழு வளர்ப்பு கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வியாண்டில் செயல்பாட்டு பெரும். வேணான் விளைப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும். வேளாண் துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 86 தலைப்புகளில் 37 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்

இவற்றை பாமகவின் திட்டங்களாக கருதாமல் வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் மூன்றாவது வேளாண் நிதி நிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும். வரும் காலத்தில் இயற்கை பிரச்னைகளால் மிகப்பெரிய ஆபத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். மனித குலத்திற்கே கெடுதல் ஏற்படுத்தும் வகையில் பிரச்னையை சந்திக்க உள்ளோம். அனைத்துக்கும் மத்திய அரசிடம் சண்டை போடும் மாநில அரசு என்எல்சி விவகாரத்தில் மட்டும் அமைதியாக துணை நிற்கிறது அதற்கு காரணம்  என்எல்சி நிறுவனம் அதானி  நிறுவனத்திற்கு விற்கப்பட இருப்பது தான்.

16 ஆண்டுகளாக நிழல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறோம்.  2026 ஆம் ஆண்டு நிஜ நிதிநிலை அறிக்கையை பாமக கண்டிப்பாக வெளியிடும்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.