ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப் பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிகளை முன்னிட்டு நாடளுமன்ற , சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிக்கான பூமி பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் மேம்பால பணிகள் முடியும் வரையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் நாடளுமன்ற,சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம்,சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குபேட்டை தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ரயில்வே இருப்பு பாதையில் மேம்பாலம் அமைப்பதற்கான தொடக்க விழா கடந்த மாதம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகள் மேம்பால பணிகள் முடியும் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை மாற்று பாதையில் இயக்குவதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளபட்டது.கனரக மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வியாசர்பாடி வள்ளலார் நகர் வழியாகவும்,இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் எழில் நகர் பக்கிங் கால்வாய் வழியாகவும் இயக்கப்பட உள்ளதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளபட்டது.
இம்மேம்பால பணிகள் முடிவடைந்தால் ஆர்.கே நகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் பகுதி மக்களுகு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் வடசென்னை நாடளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-வேந்தன்