செய்திகள்

எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வோல்ஸ்வாகன் வகை சொகுசு கார் ஒன்று நேற்று இரவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் காரை யாரும் எடுக்க வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி போலீசார் காரை கைப்பற்றி அதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். யாருக்கும்  கார் குறித்து எதுவும் தெரியாததால் காரை காவல் நிலையம் கொன்று சென்றனர்.காரின் பதிவு எண்ணை வைத்து ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதா அல்லது திருட்டு காரா என போலீசார் விசாரணை நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீவிர விசாரணையில் கார் குன்னூரை சேர்ந்த மனோகரனுக்கு சொந்தமானது என்றும் அவரிடமிருந்து திருப்பூரை சேர்ந்த மோகன் வாங்கியுள்ளார். அதற்கான முன்தொகையாக 30 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் உள்ள 4.50 லட்சத்தை பின்னர் தருவதாக கூறிவிட்டு காரை எடுத்து வந்துள்ளார்.

ஆனால் ஆறு மாத காலமாக பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து மனோகரன் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.மேலும் நேற்று இரவு மனோகரனை தொடர்பு கொண்ட மோகன் கார் எடப்பாடியில் இருப்பதாகவும் வந்து எடுத்து செல்லும்படியும் கூறியுள்ளார்.

இதனை நம்பி வந்த மனோகரன் காரை மட்டும் நிறுத்திவிட்டு மோகன் தலைமறைவாகிவிட்டார் என தெரியவந்தது. எடப்பாடி போலீசாரின் விசாரணைக்கு பின்னர் கார் மனோகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் – முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை

Web Editor

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

Saravana

தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

Gayathri Venkatesan