29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் மழை

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

மதுரவாயல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145-வது வார்டு மந்தைவெளி நகர் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை பணி நடைப்பெற்று வந்தது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன் சாலையில் பள்ளம் தோண்டி பைப்புகள் புதைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சாலையை சீரமைத்து ரோடுகள் அமைக்கும் பணி இதுவரை நடைப்பெறவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள முக்கிய சாலை முழுவதும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களான கேஸ், தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாமல் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாதாகவும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

அவசரத்திற்கு அவ்வழியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளாதாகவும் பொதுமக்கள் தங்களின் வேதனை தெரிவித்துள்ளனர். சம்மந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக விரைந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து சாலையை செப்பனிட்டு சீர் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள மீன் கம்பங்கள் எல்லாம் பழுந்தடைந்து சாலையில் விழும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

இணையத்தில் வைரலாகும் ‘ப்ராஃபி’ காபி

Saravana Kumar

கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

Ezhilarasan