முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை

பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து, அருகில் இருக்கிற பேக்கரியில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 க்கு மேற்பட்டோர் மரணமடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு வணிகத்தில் வணிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். அதேசமயம் பட்டாசுகளை சேமித்து வைப்பதும், வணிகத்தில் ஈடுபடுவதும் அரசு எந்த வழிபாட்டு முறையை அறிவுறுத்தி இருக்கிறதோ அதைப் பின்பற்றியே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும்.

இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தகுந்த பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் தவிர்க்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இருப்பினும் இதுபோன்ற கவனமின்மை காரணமையால் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவது அதிர்ச்சியும் வேதனையும்தான் அளிக்கும் என்பது உறுதி.

பட்டாசு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டுமென்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தமிழக அரசு, நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எதிரிகள் நினைத்துப் பார்க்காத ஆயுதம் செய்வோம்: பிரதமர்

Mohan Dass

மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

EZHILARASAN D

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை

Halley Karthik