இந்தியாவில் நேற்றை விட அதிகரித்தது கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, குறைவதும் அதிகரிப்பதுமாக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,466- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். நேற்று 10,126 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 11,961- பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தொற்றுப் பாதிப்பில் இருந்து இதுவரை 3,37,87,047 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 460 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,61,849ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 43, 88, 579 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் இப்போது 1,39, 683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் இதுவரை 109,63,59,208 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.