முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக முதல்மைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.