முக்கியச் செய்திகள் தமிழகம்

’ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும்’

ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கோரிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதாகவும், ஏறத்தாழ 60 கிராமங்களை உள்ளடக்கிய ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் கிராமப்புற மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான அரசு சான்றிதழ்களைப் பெறவும், கோரிக்கை மனுக்களை அளிக்கவும் 50 கிமீ அப்பால் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் ரிசிவந்தியத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அவர் தெரிவித்துள்ள அவர், குறிப்பாக மாணவர்களும், முதியவர்களும் , பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்; ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு’

மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தபடி ரிசிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும், புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக ரிசிவந்திய ஊராட்சி ஒன்றிய மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், அரசு இவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ரிசிவந்திய மக்களின் நியாயமான இக்கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 18 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர், ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ரிசிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Halley Karthik

செல்லப்பிராணிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…

Saravana Kumar

ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்

Halley Karthik