முக்கியச் செய்திகள் சினிமா

விஷ்ணு விஷால் தந்தை தப்பிவிட முடியாது: நடிகர் சூரி

பணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை அவ்வளவு எளிதாக தப்பித்து விட முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் பயிலும் செவிலியர்களுடன் உரையாடிய நடிகர் சூரி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை திரைப்படம் இருக்கும். அது மக்களுக்கான படமாகவும், அவர்களை சிந்திக்க வைக்கும் படமாகவும் இருக்கும் என்றார்.

பணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை அவ்வளவு எளிதாக தப்பித்து விட முடியாது எனவும், நீதிமன்றம் மூலம் நியாயம் தனக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

Halley Karthik

ஆகஸ்ட் 14- பிரிவினை கொடுந்துயர நினைவு தினம்

Halley Karthik

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

Arivazhagan CM