இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள் ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் உள்ளிட்ட கிரிக் கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி, அங்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4 முதல் தொடங்குகிறது.
வரும் 20 ம் தேதி மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. பின்னர் அதில் ஒரு வீரருக்கு தொற்று இல்லை என்றும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர், ரிஷப் பண்ட் என தகவல் வெளியாகி யுள்ளது. அவர் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன் பிறகு நடக்கும் பரிசோதனை யின் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர் இந்திய அணியுடன் இணைவர் என்று கூறப் படுகிறது.







