இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனுக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எகஸ் தளப் பதிவில், “சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.