“மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல்கள் பரவுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார்!

அரசு வழக்கறிஞர் நியமனம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளார்களை சந்தித்து பேசினார். அப்போது “மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. நிறைய இடத்தில் பணம் பெற்று தவறான முறையில் நியமிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அரசு வழக்கறிஞர் நியமனம் நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.

இன்னும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. நேற்று மாலையில் இருந்து தான் ஜீவோ பாஸ் ஆகி உள்ளது. இந்த நியமனம் ஆறு மாத கால தற்காலிக நியமனம் ஆகும். எவரெனும் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கி இருந்தால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 45 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் நேர்மையான முறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறுகிறது.

இதில் 800 வேலை வாய்ப்பு உள்ளது. மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இல்லை. அமைச்சர்கள் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் ஆய்வு செய்வதால் என்ன பிரயோஜனம், ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது, மின்துறை சார்பில் நேரடி புகார்களை தெரிவிக்கலாம்.

முதல்வரை இன்னமும் கரூருக்கு செல்ல விடாமல் இருக்க வேண்டிய பணிகளை திமுக செய்கிறது.
அனைத்து தடைகளையும் மீறி முதல்வர் கரூர் செல்வார். உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை திமுகவுக்கு என்ன? கரூர் எங்கள் வாழ்நாள் துயரம். அதை ஒரு போதும் மறக்க மாட்டோம், அரசு வேலை என்பதை விட நாங்கள் அவர்களோடு துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.