என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்

என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி…

என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் கத்தாழை, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, சின்ன நெற்குணம் ஆகிய 5 ஊராட்சிகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற உதவியதாக கருதி, இந்த 5 பேரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பழிவாங்கல் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : மக்களை மதத்தால் பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி புரியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

மாவட்ட நிர்வாகத்தின் இந்த பழிவாங்கல், சிக்கலை பெரிதாக்குவதற்கு தான் உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது. அடக்குமுறையும், அத்துமீறலும், பழிவாங்கலும் எல்லா காலமும் வெற்றி பெறாது. இதை உணர்ந்து ஊராட்சி செயலாளர்களின் பணியிட மாற்ற ஆணையையும், பெண்கள் மீதான பொய் வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

மக்கள் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதுடன், என்.எல்.சியை வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.