சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில் பால்குட விழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி பால்குட விழா நடைபெற்றது – இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக…

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில்
சித்ரா பௌர்ணமி பால்குட விழா நடைபெற்றது – இதில் பக்தர்கள்
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக 82
ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்து வந்து
சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த
நிகழ்வு இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் சித்தர்
முத்து வடுகநாதசுவாமி, இந்தப் பகுதி மக்களிடையே மக்களோடு மக்களாக
வாழ்ந்து முக்தி பெற்றவராகும்.

பொதுமக்கள் முன்னிலையில், சுமார் 190 ஆண்டுகளுக்கு முன்பாக நல்ல குளம்
வடகரையில் ஜீவ சமாதி பெற்று முக்தி அடைந்தார். மேலும், கேட்ட வரம்
கொடுக்கும் வள்ளலாக சுவாமி முத்துவடுகநாதர் இருப்பது சிறப்பான ஒன்றாகும்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வணிகர் சங்கம் சார்பில், சீரணி அரங்கம்
பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன் காத்திருந்தனர்.

அவர்களை அழைத்துவர சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் இருந்து,
ஆலவட்டத்துடன் முக்கிய வீதிகள் மூலம் ஊர்வலமாக சீரணி அரங்கம்
சென்றனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடங்கள் பெரியகடை வீதி, நான்கு
முனை சந்திப்பு சாலை , வேங்கைபட்டி சாலை வழியாக வந்து கோயிலை
அடைந்தது.

மேலும், பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் கோயில் முன் வைக்கப்பட்டுள்ள
தொட்டியில் சேகரிக்கப்பட்டது. பின்னர், மின் மோட்டார் மூலமாக சித்தர்
முத்துவடுகநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுமார் 10 ஆயிரத்திற்க்கும்
மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000 பக்தர்கள்
கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.