தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: திமுக வரவேற்பு!

தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக வரவேற்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு சிபிஐ, சிபிஐஎம், ஐயூஎம்எல், விசிக, மஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவும் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தின் மீதான் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, “தொகுதி மறுவரையினால் தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தொகுதி மறுவரையரையி பாதிப்புகள் குறித்து இந்தியாவுக்கே எடுத்துரைத்தது திமுக தான். தொகுதி மறுவரையரை என்று கூறி தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியை குறைக்க நாங்கள் விட மாட்டோம்.

அதற்காக அனைத்து கட்சி கூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் அமைச்சரவையையும் கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளார். திமுக நடத்திய அனித்துக்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த தொகுதி மறுவரையறையை செயல்ப்படுத்த கூடாது என 7 மாநில முதல்வருக்கு விரிவான கடிதம் அனுப்பினோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் கொண்டு வர கூடாது என்றும் தெரிவித்தோம்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை தமிழ்நாடு முழுக்க திமுக எரித்தது; திமுக காட்டிய எதிர்ப்பினால் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது; இந்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது; எனவே அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.