GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.14,250-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், 1 கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன் படி வெள்ளி ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.