எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…

Reserve Bank to release Rs 7 coin to honour MS Dhoni? What is the truth?

This news Fact Checked by ‘Newsmeter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி (MSD). இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான அவர், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவர் அணிந்திருந்த நம்பர் 7 ஜெர்சிக்காக அறியப்பட்டார். கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பிற்கு பிசிசிஐ கெளரவம் அளித்தது. மேலும் எண் 7 என்ற ஜெர்சிக்கு ஓய்வும் கிடைத்தது. இது தோனியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக எப்போதும் நினைவில் வைக்கப்படும் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது.

இதனிடையே, தோனியின் புகைப்படம் மற்றும் பெயரைக் கொண்ட ரூ.7 நாணயங்களின் படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த நாணயங்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நினைவாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் பகிரப்படுகிறது. ட்விட்டர் (எக்ஸ்) – ல் உள்ள ஒரு பயனர், இந்த நாணயங்களின் படத்தைப் பகிர்ந்து, “RBI மகேந்திர சிங் தோனியின் நினைவாக புதிய 7 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது. ‘தல’ மீண்டும் ஜொலிக்கிறார்” (காப்பகம்) என பகிர்ந்துள்ளார்.

உண்மை சரிபார்ப்பு:

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மதிப்பாய்வு செய்ததன் மூலம் விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் எம்எஸ் தோனியின் நினைவாக ரூ.7 நாணயங்களை வெளியிடுவது குறித்து எந்த வெளியீட்டும் ரிசர்வ் வங்கியின் வலைதளப் பக்கங்களில் காணவில்லை. இணையதளத்தின் செய்தி வெளியீட்டுப் பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், நவம்பர் 14 முதல் அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது. மேலும், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. ஆனால் ரூ.7 பற்றிய குறிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) இணையதளத்தில் நினைவு நாணயங்களின் பட்டியலும் சரிபார்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், ஆளுமைகள், ஆண்டுவிழாக்கள் அல்லது மைல்கற்கள் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக நினைவு நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் அவை பெரும்பாலும் தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. எனினும், இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனியின் நினைவாக ரூ.7 நாணயம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

இதுகுறித்து கூகுளில் தலைகீழ் படத் தேடலை மேற்கொண்டபோது, ​​எம்.எஸ்.தோனியின் நாணயங்கள் முதலில் நவம்பர் 3-ம் தேதி இன்ஸ்டாகிராம் பயனர் தத்யாவால் வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த பதிவு, தோனியை கௌரவிப்பதற்காக ரிசர்வ் வங்கி நாணயம் வெளியிடுவதாக தலைப்புடன் பகிரப்பட்டது. ஆனால், பதிவின் முடிவில் இந்த பதிவு “நையாண்டி” நோக்கம் கொண்டது என்றும் முற்றிலும் “பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக” உருவாக்கப்பட்டது என்றும் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பதிவு பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் பயோ மற்றும் அதன் உள்ளடக்கங்கள் நையாண்டி என்று வெளிப்படையாக குறிப்பிடுவதும் கண்டறியப்பட்டது.

நவம்பர் 14 அன்று, ட்விட்டர் (எக்ஸ்) இல் உள்ள PIB Fact Check ஹேண்டில், ரூ.7 என பகிரப்படும் நாணயத்தின் வைரலான படத்தை வெளியிட்டு, அது போலியானது என்பதை தெளிவுபடுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் எம்எஸ்.தோனியின் பங்களிப்புக்காக பொருளாதார விவகாரங்கள் துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. (காப்பகம்)

முடிவு:

எனவே, இந்திய கிரிக்கெட்டுக்கு எம்எஸ் தோனியின் பங்களிப்புக்காக ரிசர்வ் வங்கி ரூ.7 நாணயங்களை வெளியிட்டது என்ற கூற்று தவறானது என்று முடிவு செய்யப்பட்டது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.