வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் காப்பாற்றப்பட்ட நிலையில், தமது சைக்கிளையும் மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் தரைப்பாலம் மழை நீரில் மூழ்கி, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாலத்தை கடக்க முயன்றபோது, காட்டாற்று வெள்ளத்தின் வேகம் காரணமாக அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு நபர், சமயோஜிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார். அதே நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சைக்கிளை மீட்டுத் தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







