பாலாற்றில் வெள்ளம்; 100 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 4-வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மதுராந்தகம் ஈசூர்…

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 4-வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மதுராந்தகம் ஈசூர் பகுதியில் முள்வேலி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் மூழ்கியதால், மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், நான்காவது நாளாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால், தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.