கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து 2வது நாளாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முடித்து கொண்டார்.
மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், முகாம் நடத்தாமல் காலம் தாழ்த்திய ஆட்சியரைக் கண்டித்தும், முகாம் நடத்த கடிதம் வழங்க கோரியும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேற்று மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியும் கைவிட மறுத்து, தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
https://twitter.com/jothims/status/1464156387592663044
இந்நிலையில், ஜோதிமணியுடன் வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டார். முகாம் நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என ஜோதிமணி எச்சரிக்கை விடுத்தார்.







