முக்கியச் செய்திகள் தமிழகம்

தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு

தாய்லாந்து – மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்களில் இரண்டாம் கட்டமாக 1 கேரள இளைஞர் மற்றும் 7 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்.

மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக கூறி, தாய்லாந்து இணையதள வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவ்வேலைகளைச் செய்ய மறுத்தால், கடுமையாக தாக்கப்படுவதாகவும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வீடியோ மூலம்  தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். மேலும், அவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது குடும்பத்தினரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானனின்  உத்தரவின்பேரில், முதற்கட்டமாக 18 தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறை மூலம் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். தற்போது இரண்டாம் கட்டமாக 8 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையம்அழைத்து வரப்பட்டனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அயலகத்தமிழர் நல ஆணையரகத்தின் உயர் அலுவலர்கள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழகத்திலிருந்து இளைஞர்கள் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக, பல்வேறு நாடுகளில் தகவல் தொழில்நுட்ப பணிக்காக செல்லும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் அவர்கள் பணிக்கு செல்கின்ற நேரத்தில், அவர்களுக்கு உரிய பணி வழங்கப்படாமல் மாற்றுப் பணியாக சட்டத்திற்கு புறம்பான பணிகள் வழங்கப்படுகிறது.

அவற்றை அவர்கள் மறுத்த காரணத்தினால், பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள், ஊடகங்கள் மூலமாகவும் அவர்களது பெற்றோர்கள் மூலமாகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து, அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 18 நபர்களையும் இன்று 8 நபரையும் அழைத்து வந்திருக்கிறோம். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரும் மீட்கப்பட்டுள்ளார்.நாளையும் பத்து நபர்கள் வருவதாக செய்திகள் வந்துள்ளது. அவர்களையும் வரவேற்று, அவர்களது இல்லத்தில் ஒப்படைக்கும் பணி தமிழக அரசு சார்பாகவும், எங்கள் துறை சார்பாகவும் நடைபெறும்.

தவறான வழிகாட்டுதல் செய்கின்ற ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தின் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விரைவில் அவர்களை மீட்கும் பணி நடைபெறும். பல்வேறு நாடுகளிலிருந்து, பல்வேறு காலக்கட்டங்களில் இது போன்ற தகவல்களை அறிந்து, 600க்கும் மேற்பட்ட நபர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டு கொண்டு வந்துள்ளோம். எந்தெந்த மாவட்டங்களில் அதிகமான நபர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்களோ, அதை கண்காணித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் +91-9600023645, +91-8760248625, 044-28515288 என்ற மூன்று எண்களைப் பயன்படுத்தி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செய்வினை நம்பிக்கை – அண்ணணை கொலை செய்த தம்பி

EZHILARASAN D

ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்

Web Editor

அடுத்த வருடமும் சம்பவம் இருக்கு: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி

Halley Karthik