முக்கியச் செய்திகள் தமிழகம்

கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சென்னை மற்றும் கொச்சினில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு வந்தததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கோவை மாநகர காவல் துறையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஐந்து இடங்களிலும், கொச்சியிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது நிஜாமுதின் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!

Jayapriya

தமிழ்நாடு, புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Web Editor

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

G SaravanaKumar