முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, அகதிகள் முகாமில் தங்கவைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் 12 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக தகவலறிந்த இந்திய கடலோர காவல்படையினர், ஹேவர்கிராப்ட் ரோந்து கப்பலில் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பிறகு, கடலோர காவல் படையினர் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த கலைக்குமார், ஆனந்தினி, தில்லையம்மாள் மற்றும் மட்டகளப்பையை சேர்ந்த சசிகரன், கலைசெல்வி உள்ளிட்ட 12 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்கனவே தங்கியிருந்தது தெரியவந்தது.

பின் 2019-ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை ஒரு பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி இரண்டாம் மணல் திட்டில் வந்து இறங்கியதாகவும், பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை சேர்ந்த ஒரிவரிடம் வீட்டில் உள்ள நகைகளை விற்று 2 லட்சம் ரூபாய் கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான், தங்களை அழைத்து வந்த படகு, தனுஷ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்த வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக நீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டாம்-அதிமுகவிற்கு டி.ஆர்.பாலு கண்டனம்

Web Editor

9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Web Editor

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்-நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முக்கியப் பரிந்துரை

Web Editor