‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுரு வலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’…

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுரு வலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’ சேவை துவக்க விழா நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, இந்திய பாதுகாப்பு பணிக்காக கப்பலை அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடற்படை ஜெனரல் எம்.எம்.நரவனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கப்பல் உருவாகப்பட்டுள்ளது மிகப்பெருமையாக உள்ளதாகவும், இந்த கப்பல் கடலோர காவல்படையில் சேர்வதன் மூலம் இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

மேலும், 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு கடல் வழியாக இந்தியாவிற்குள் எந்தவொரு தீவிரவாத ஊடுறுவலும் நடைபெறவில்லை என்றும், அந்தளவுக்கு இந்திய கடலோர காவல்படை நமது கடற்பகுதியை பாதுகாத்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.