கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி மாத பெருவிழா கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அமராவதி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலயத்தில் இருந்து கம்பத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலை 5.00 மணி அளவில் பல்லக்கில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது கச்சேரி பிள்ளையார் கோவில் முன்பு வரும்போது அனைத்து ஜமாத் இஸ்லாமிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்கள் சார்பாக பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகம் சார்பாக இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: