கர்நாடக அணைகளிலிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறப்பு

  கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண…

 

கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.
கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் அமைந்துள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைமட்டம் உயர்ந்துள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக அணை வேகமாக நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபினி, மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 286 கனஅடி நீரும்,கபினி அணையில் இருந்தும் 5 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றின் மூலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.