சாதனை படைத்த திமுக; 30 ஆண்டுகள் கழித்து அயோத்தியா பட்டணத்தில் வெற்றி

சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிய திமுக, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வாக்கு எண்ணும் மையத்தில் அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, பேளூர்,…

சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிய திமுக, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வாக்கு எண்ணும் மையத்தில்
அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, பேளூர், வாழப்பாடி ஆகிய நான்கு
பேரூராட்சிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன . அயோத்தியாபட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 12 இடங்களையும் அதிமுக 3 இடங்களையும் கைப்பற்றியது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து, அக்கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
கன்னங்குறிச்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 12
இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பெற்றன.

வாழப்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளையும், அதிமுக 5 வார்டுகளையும், பாமக 2 வார்டுகளையும் மற்றும் சுயேட்சை 1 வார்டிலும் வெற்றிப்பெற்றனர். சுயேட்சை வேட்பாளர் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த பேரூராட்சியையும் திமுகவே கைப்பற்றும் என அக்கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 37 பேரூராட்சிகளின பெரும்பான்மையான பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.