‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்

‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், திமுக…

‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றியை பெற்றுவரும் நிலையில், மற்றக்கட்சிகளும் சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, அமமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி!

அண்மைச் செய்தி: ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகளாக நெஞ்சுரத்தோடு களம் கண்ட கழக வேட்பாளர்களுக்கும்.
அவர்களுக்காகப் பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும் வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய  News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.