‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!

சொல்லாமல் நகை கடைகளை மூடிவிட்டுச் செல்லும் இந்த காலகட்டத்தில், கடையை மூட போகிறேன் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

சொல்லாமல் நகை கடைகளை மூடிவிட்டுச் செல்லும் இந்த காலகட்டத்தில், கடையை மூட போகிறேன் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் கந்தரவக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அதன் ஒரு கிளை தான் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை எதிரே உள்ள சாந்தி பேங்கர்ஸ் என்ற நகை அடகு கடை. இந்த கடையை கடந்த மூன்று ஆண்டுகளாக சாந்தி பேங்கர்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் அந்த கடையை கவனிக்க முடியாததால் கடையை வருகிற 30ஆம் தேதி மூட உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கடையில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். நகைகளை அடகு வைத்தவர்களை ஏமாற்ற நினைக்காத உரிமையாளர், கடைகளை மூட உள்ளதாகவும், வருகிற 30 ஆம் தேதிக்குள் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நகை உரிமையாளர்களுக்கு கடிதம் மூலமும் தகவல் தெரிவித்து வருகிறார்.

இதனையடுத்து நகை அடகு வைத்தவர்கள் தங்களது நகைகளை தற்போது மீட்டு வருகின்றனர். நகை அடகு கடைகளை சொல்லாமல் – கொள்ளாமல் மூடி செல்லும் இந்த காலகட்டத்தில், நகைக்கடையை மூட போகிறேன் உங்களது நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அதன் உரிமையாளர் அறிவிப்பு பலகை வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி தற்போது இது தொடர்பான செய்திகளும் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.