தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இன்று பட்டம் பெறுபவர்களில் அதிகமானோர் பெண்கள்தான், அந்த அளவிற்கு உயர்கல்வி துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என சமூகம் இருந்தது. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிடன் மாடல், பெரியார் மண்” என்று தெரிவித்தார்.

நாங்கள் இந்திக்கு எதிர்ப்பாளர்கள் அல்ல, தேவைக்கு இந்தியை எடுத்து கொள்வோம் ஆளுநர் இதனை தயவு கூர்ந்து கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அமைச்சர், “விரும்புவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கிறதா? கோவையில் பாணி பூரி கடை நடத்துகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்கள் இருந்தால் வரவேற்போம். ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார், தமிழ்நாட்டின் பிரச்சனைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். இந்தியை கட்டயமாக்கக்கூடாது. 3வது மொழி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆளுநர் தமிழக மாணவர்களின் நிலை மற்றும் தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

திமுக தலைவர் ஸ்டாலின் மீது அதிமுகவினர் புகார்

Jeba Arul Robinson

பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Arivazhagan CM

நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது: சீதாராம் யெச்சூரி

Niruban Chakkaaravarthi