சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்ல திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர், சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த சோதனைகளுக்கு முடிவு கட்டியிருப்பதாகவும், ஒராண்டு காலத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் சாதிப்பதைவிட பல மடங்கு சாதித்து காட்டியிருப்பதாக பேசினார். மேலும், தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி; ‘மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்; தமிழ்நாடு அரசு’
மேலும், இது என்னுடைய ஆட்சி அல்ல, இது நம்முடைய ஆட்சி என தெரிவித்த அவர், தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டோம், ஒராண்டில் செய்து முடித்ததையும் புத்தமாக வெளியிடும் அளவுக்கு பல காரியங்களை செய்து முடித்துள்ளோம் என தெரிவித்த அவர், மிகப்பெரிய சாதனை, மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண சலுகை என்றார். மேலும், பேருந்து கட்டண சலுகையால் மிச்சமான பணத்தை சேமிக்கும் பழக்கத்திற்கு பெண்கள் வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: