இயக்குனர் மற்றும் நடிகரான சசிக்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கிருந்த இப்படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், ஆகியோர் நடித்தனர்.
தற்போது அவர் “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் ”மைலார்ட்” என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குரு சோகசுந்தரம், கன்னட நடிகை சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ‘மை லார்ட்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
#Mylord Trailer Out Now 📽️
ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன்கிட்ட கொடுத்துருக்கு@Dir_Rajumurugan returns with a powerful mix of social messages, real incidents, humor & political undertones.
Produced by @Olympiamovis… pic.twitter.com/bItoRvW4cu
— M.Sasikumar (@SasikumarDir) January 19, 2026







