கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணை இன்று நடைபெற்றது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். விசாரணை முடிவடைந்ததையடுத்து விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு தேவையான தகவல்களை விஜய் வழங்கினார். அடுத்த கட்டமாக விஜய் அவர்களுக்கு நேரில ஆஜராக சம்மன் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பான ஊடகங்கள் தவெக மீதும் அதன் தலைவர் விஜய் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர். விஜய் மற்றும் கட்சி மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். குறிப்பாக குற்றப்பத்திரிக்கையில் விஜய் அவர்கள் இணைக்கப்படுவார் போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது , அவர் முன் 41 பேர் உயிர் இழப்புக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அளிக்கப்பட்டதா ? இது தொடர்புடையவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? போன்ற கேள்விகளை கேட்காமல் தவெக மீது பொய்யான தகவல்களை ஊடகங்கள் பரப்பகின்றனர்” என்றார்.







