முக்கியச் செய்திகள் தமிழகம்

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!

முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் மளிகைப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அரசுக்கு ஒத்துழைப்பை தரும் வகையில், வணிக நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்த விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி, செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகளை விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஒரு வார தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

தேர்தலால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது: கிருஷ்ணசாமி

Ezhilarasan

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது!

Jeba

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: துரைமுருகன்!

Saravana